Thursday, May 2, 2024




Homeதமிழ்நாடுVVPAT-ல் பதிவான சீட்டுகளுடன் வாக்குகளை சரிபார்ப்பதை கட்டாயமாக்க கோரி மனுவை ஏற்க ஐகோர்ட் மறுப்பு

VVPAT-ல் பதிவான சீட்டுகளுடன் வாக்குகளை சரிபார்ப்பதை கட்டாயமாக்க கோரி மனுவை ஏற்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை: தமிழகத்தில் மக்களவை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை, ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் பதிவான சீட்டுகளுடன் சரிபார்ப்பதை கட்டாயமாக்கக் கோரிய வழக்கை விசாரணைக்கு ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கமிலஸ் செல்வா என்பவர் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் நாளை (ஏப்.19) மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை, ஒப்புகைச் சீட்டு இயந்திரம் எனும் விவிபேட் இயந்திரத்தில் விழும் சீட்டுகளுடன் ஒப்பிட்டு சரிபார்ப்பதை கட்டாயமாக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதே விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது எனக்கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments