Wednesday, May 1, 2024




வறட்சி பாதிப்பு: விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அன்புமணி வேண்டுகோள்

0

சென்னை: தமிழகம் முழுவதும் நிலவி வரும் கடுமையான வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மாம்பழம் மற்றும் பப்பாளி பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகம் முழுவதும் நிலவி வரும் கடுமையான வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மாம்பழம் மற்றும் பப்பாளி பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வறட்சியால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கு கடுமையான இழப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு நிவாரணம் வழங்க இதுவரை தமிழக அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது.

ஏற்காட்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

0

சென்னை: ஏற்காடு மலைப்பகுதியில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் நேற்று மாலை தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் துயரத்துக்குள்ளானேன்.

கோவையில் இரவில் ஏற்படும் மின் தடையால் மக்கள் அவதி: மின்வெட்டு அபாயம் உள்ளதாக தொழில் துறையினர் தகவல்

0

கோவை: கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இருப்பை விட தேவை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் தினமும் இரவு நேரங்களில் தொடர் மின் வெட்டு ஏற்படுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக கருதப்படும் மின்சாரம், கோடை காலத்தில் மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள மிகவும் உதவி வருகிறது. தமிழகம் முழுவதும் கோடை காலங்களில் மின் தேவை வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும். இவ்வாண்டு முதல் முறையாக தினசரி மின் நுகர்வு 20 ஆயிரம் மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. இருப்பினும் தற்போது வரை மின்வெட்டு பெரிய அளவில் அமல்படுத்தப்படவில்லை.

கடந்த சில நாட்களாக மின்சாரம் இருப்பை விட தேவை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் தினமும் இரவு மின் தடை ஏற்பட தொடங்கியுள்ளது. மே மாதம் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு சூரிய ஒளி ஆற்றல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (டான்ஸ்பா) செயலாளர் சாஸ்தா எம்.ராஜா கூறியதாவது: வழக்கத்தை விட இவ்வாண்டு கோடை காலத்தில் தினசரி மின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் புதிய ஏசி மெஷின் உள்ளிட்ட பொருட்கள் பயன்பாடு காரணமாக வழக்கத்தை விட 20 சதவீதம் மின்தேவை அதிகரித்துள்ளது. தற்போது வரை மின் வெட்டு பெரியளவில் அமல்படுத்தப்படவில்லை.

மே மாதம் தினசரி மின் தேவை 21 ஆயிரம் மெகா வாட்டாக உயர அதிக வாய்ப்புள்ளது. அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால் தற்போது கையிருப்பில் உள்ள மின்சாரம் விநியோகத்திற்கு போதுமானதாக இருக்காது. எனவே மின்தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் சூரிய ஒளி ஆற்றல் உற்பத்தியின் மொத்த திறன் 6 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது.

தற்போதைய சூழலில் தினசரி மின் தேவையை பூர்த்தி செய்ய முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. தமிழக அரசு மின் உற்பத்தி துறையில் குறிப்பாக சூரிய ஒளி, காற்றாலை போன்ற திட்டங்களில் தனியார் நிறுவனங்கள் அதிக முதலீடு செய்வதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவே இப்பிரச்சினைக்கு தீர்வு காண உதவும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு மின் நுகர்வோர் சங்கத்தின் (டீகா) தலைவர் பிரதீப் கூறும்போது, ‘‘கடந்த 29-ம் தேதி தமிழகத்தின் மொத்த மின் கையிருப்பு 435.35 மில்லியன் யூனிட்டாகவும், தேவை 436.18 மில்லியன் யூனிட்டாகவும் இருந்தது. மே மாதத்தில் காற்றாலை மின்உற்பத்தி தொடங்கும் என்பதும் அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டிருக்கும் என்பதால் மின்விநியோகத்தில் பெரியளவில் பாதிப்பு ஏற்படாது என நம்புகிறோம்,’’ என்றார்.

‘பீடர்’ இயந்திரம் திணறல்: மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, ‘‘கோவையில் தினமும் இரவு மின்சாரத்தின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மின்சாரம் விநியோகிக்க உதவும் ‘பீடர்’ இயந்திரம் சீராக செயல்பட முடியாமல் திணறுகிறது. இருப்பினும் மக்கள் நலன் கருதி மாற்று ஏற்பாடுகள் செய்து இரவில் சீரான மின்விநியோகம் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்,’’ என்றனர்.

Saying ‘go and hang yourself’ isn’t abetment to suicide: HC

0

Karnataka High Court acquitted a man accused of abetting suicide for telling a priest to ‘go and hang yourself’. Mens rea is essential for wrongdoing, emphasizing intent over words spoken in anger.

Delhi court dismisses Manish Sisodia’s bail plea

0

A Delhi court dismissed the second regular bail plea that was filed by former deputy chief minister Manish Sisodia in the money laundering and corruption cases related to the now scrapped liquor policy of 2021-22. The court of special judge Kaveri Baweja rejected the bail requests in the CBI and ED cases, mentioning that it was not the appropriate stage for it.

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு

0

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு விசாரணையை தள்ளி வைக்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள மனு மீதான உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளி வைத்திருந்தது.

கொடைக்கானலில் கோல்ப் விளையாடிய முதல்வர் ஸ்டாலின்

0

திண்டுக்கல்: கொடைக்கானலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை கோல்ப் விளையாடி மகிழ்ந்தார்.

கொடைக்கானலுக்கு கடந்த திங்கள்கிழமை குடும்பத்தினருடன் ஓய்வெடுப்பதற்காக வந்துள்ள முதல்வர் ஸ்டாலின், தனியார் விடுதியில் தங்கியுள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை கொடைக்கானல் பசுமைப் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கோல்ப்மைதானத்துக்கு முதல்வர் சென்றார். சுற்றுலாப் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக, மாலை 5.45 மணிக்குமேல் கோல்ப் கிளப்புக்குச் சென்ற முதல்வர், அங்கிருந்து பேட்டரி கார்மூலம் மைதானத்துக்குச் சென்றார்.அங்கு சுமார் அரை மணி நேரம் கோல்ப் விளையாடி மகிழ்ந்தார்.

பின்னர் கோல்ப் கிளப் சென்று, அங்கிருந்து காரில் தனியார் விடுதிக்குத் திரும்பினார். முதல்வர் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

குழந்தை வேலப்பர் கோயிலில்… இதற்கிடையில், முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின், கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் நேற்று மாலை சுவாமி தரிசனம் செய்தார். அங்கிருந்த பொதுமக்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

அமைச்சர்கள், ஓபிஎஸ்-க்கு எதிரான மறு ஆய்வு வழக்கு: அடுத்த மாதம் தள்ளிவைப்பு

0

சென்னை: அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆகியோருக்கு எதிரான மறு ஆய்வு வழக்குகளின் விசாரணை ஜூன் மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை விடுவித்து கீழமை நீதிமன்றங்கள் பிறப்பித்த தீர்ப்புகளை மறு ஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறார்.

இலக்கை நிர்ணயம் செய்து கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம்: பிரிவு உபசார விழாவில் நீதிபதி சந்திரசேகரன் அறிவுரை

0

சென்னை: இலக்கை நிர்ணயம் செய்து கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம் என பணிஓய்வு பெறவுள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.சந்திரசேகரன் அறிவுறுத்தினார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி. சந்திரசேகரன் வரும் மே 30-ம் தேதியுடன் பணி ஓய்வுபெறுகிறார். மே 1-ம் தேதி முதல்சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை என்பதால் அவருக்கான பணி ஓய்வுபிரிவு உபசார விழா நேற்றுஉயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா தலைமையில் நடைபெற்றது.

போலிகளை தடுக்கவே வாகனத்தில் ‘அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர் ஒட்ட தடை’ – போக்குவரத்து போலீஸ் விளக்கம்

0

சென்னை: அண்மை காலமாக தனியார் வாகனங்களில் பத்திரிகை, தலைமைச் செயலகம், காவல் துறை, வழக்கறிஞர், உயர் நீதிமன்றம், மருத்துவர், தீயணைப்பு துறை, ராணுவம் போன்ற துறைகள், நிறுவனங்களின் பெயர்கள் எழுதப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் ஆய்வு செய்தபோது பலர் தங்கள் வாகனங்களில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கர்களுக்கும், அவர்களுக்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. குறிப்பாக குற்றச் செயல்களில் தொடர்புடைய சிலர் கூட இதுபோன்ற ஸ்டிக்கர்களை ஒட்டி போலீஸாரின் கவனத்தை திசை திரும்பி நழுவினர்.

இதை தடுக்கவும், சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்களின் மதிப்பை வலுப்படுத்தும் வகையிலும் சென்னை காவல் ஆணையர் ஒப்புதலின்பேரில் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் கடந்த 27-ம்தேதி சுற்றறிக்கை ஒன்றைவெளியிட்டார். அதில், ‘குற்றம்சாட்டப்பட்டவர்களும் வாகனத்தில் ஊடகம், காவல் துறைஉட்பட பல்வேறு வகையான ஸ்டிக்கர்களை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள்.

இதனால் காவல் துறையின்கடுமையான நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து விடும்நிலை உள்ளது. எனவே, தனியார் வாகனங்களில் அரசால்அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது. விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீதுவரும் 2-ம் தேதி முதல் மோட்டார் வாகன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்தார்.

இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பும், ஆதரவும் சரிசம அளவில் வந்துள்ளதாக கூறும் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் இதுகுறித்து மேலும், கூறியதாவது:

காவல்துறை, ஊடகம், வழக்கறிஞர், மருத்துவர், அரசியல் கட்சி என ஸ்டிக்கர் ஒட்டுவதால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், அண்மை காலமாக இதற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் கூட இதுபோன்ற ஸ்டிக்கர்களை ஒட்டி வானங்களில் பயணிக்கின்றனர்.

இது சம்பந்தப்பட்ட துறைக்குஅவமரியாதையை ஏற்படுத்தும். மேலும், குற்றவாளிகள் கூட இதுபோன்ற ஸ்டிக்கர்களை ஒட்டி போலீஸாரின் கவனத்தை திசை திருப்பி நழுவி விடுகின்றனர். மேலும், போலீஸாரின் வாகன சோதனையில் இருந்து தப்பிக்க இது போன்ற செயலில் ஈடுபடுகின்றனர்.

இதை ஆரம்பத்திலேயே தடுக்கவில்லை என்றால் எதிர் காலத்தில் பெரிய அளவிலான அசம்பாவிதத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இதை தடுக்கும் வகையில் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்ட தடை விதித்துள்ளோம்.

வழக்கறிஞர்கள், ஊடகத்துறையினர், மருத்துவர்கள் உட்பட மேலும் சில துறையைச் சேர்ந்தவர்கள் தங்களது கோரிக்கையை வெளிப்படுத்தி வருகின்றனர். அதை கவனித்து வருகிறோம்.

தேவைப்பட்டால் எங்களது உத்தரவில் ஒரு சில மாற்றங்கள் செய்வது குறித்து ஆலோசித்து வருகிறோம். ஆனால், போலிகள் ஊடுருவுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்கள் மீது சமரசமற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ஒரே வாகனத்தில் பல ஸ்டிக்கர்: ஒரே வாகனத்தில் ஊடகம், வழக்கறிஞர், மருத்துவர் என சிலர் அனைத்து அடையாளங்களையும் வெளிப்படுத்தி ஸ்டிக்கர் ஒட்டுகின்றனர். மெக்கானிக், உணவு டெலிவெரி செய்பவர்கள், கடை வைத்திருப்பவர்கள், எந்த வேலைக்கும் செல்லாதவர்கள் கூட ‘ஊடகம், காவல், வழக்கறிஞர் உட்பட பல்வேறு துறை சார்ந்த ஸ்டிக்கர்களை தங்களது வாகனங்களில் ஒட்டி பயணிக்கின்றனர்.

அதேபோல் கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் கூட எந்த கட்சி ஆட்சி செய்கிறதோ அந்த கட்சியின் சின்னம், ஸ்டிக்கரை ஒட்டி கொண்டு ஆதாயம் அடைய முயல்கின்றனர்.

இதை தடுக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம். இதற்குஅனைவரது ஒத்துழைப்பும் தேவை. துறை சார்ந்தவர்கள் சென்னை காவல் துறை,போக்குவரத்து காவல் துறைசமூகவலைதள பக்கங்களில்ஆலோசனை தெரிவிக்கலாம். நேரிலும் வழங்கலாம். பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனித உரிமை பெயரில்.. தமிழகத்தில் சமீபகாலமாக மனித உரிமை அமைப்பு, மனித உரிமை கழகம் போன்ற பெயர்களில் சிலர் கட்டப் பஞ்சாயத்து, மிரட்டி பணம் பறித்தல் உட்பட பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீதும் போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.